Wednesday, November 24, 2010

Kavithai From My Heart

என்னுள் நீ
இரத்தத்தில் கலந்து
இதயத்தை உதைத்து
எண்ணத்தை வதைக்கிறாய் !!

ஆசை!!!

மாலை வேலையில்
நெடுஞ்சாலையில் Yamaha sz ல்
நீயும் நானும்

வழியில் Coffee Day ல்
சிறிது நேரம்
நீயும் நானும்

என் வீட்டில்
எல்லோருடனும்
நீயும் நானும்


செம்மொழியில் நான் என்றாலும்
எம்மொழியில் நான் என்றாலும் - அது
என்மொழியில் நீ தான்

நீரில் மூழ்கியவனுக்கு
சுவாசம் போல
வறண்ட பயிருக்கு
தண்ணீர் போல
இரைச்சலை கேட்பவனுக்கு
இசையை போல
உன் ஒரு வார்த்தை
எனக்கு !!

ஏழு சுரங்களும்
அதன் ராகங்களும் - தேவையில்லை
நீ பேசும்போது

பதில்கள் இல்லா
கேள்விகள் என்னுள்ளே
ஆயிரம் - உன்னாலே

பிரிதலின் துன்பத்தை
படித்தது நற்றிணையில்
அதை உணர்ந்தது
இன்று உயர்திணையில்

அலெக்ஸாண்டர் உடன் இருந்ததால்
போரஸ் மன்னனின் படையையே
எதிர்த்து நின்றது அவன் குதிரை...
நீ என்னுடன் இருந்தால்
இவுலகே வந்தாலும் எதிர்ப்பேன்
நான்!!!

என்னுள் இருந்து கவிதையை
எழுத்துவிப்பது நீ!!
ஒருவன் உள்ளிருந்து அவனை
இயக்குவது உயிர் என்றால்
என் உயிரே நீ தான்

காதல் வளர்க்கும்
தமிழ் வாழ்க
தமிழ் வளர்க்கும்
காதல் வாழ்க

ஆறாம் அறிவு எதுவென்று
நான் இருந்தேன்
உனை அறியத் தலைப்படுதலே
அதுவென்று இன்றுணர்ந்தேன்

என் இதய
புத்தகத்தில் நீ இருப்பதினால்
இந்த முகப் புத்தகம் அதை
பிரதிபலிக்கின்றது

மழை வரும் முன்புதான்
மண்வாசம் - ஆனால்
எப்பொழுதும் என்மனதில்
உன் வாசம்

கழுத்து வலியும்
ஒருவிதத்தில் சுகம்தான்
வருவது நீயாவென
ஒவ்வருமுறையும்
திரும்பி பார்க்கும்பொழுது

பொறாமையாய் இருக்கிறது - உன்
காதோரமாய் காற்றில் பறக்கும்
முடியைக் கண்டு!!
கோதி விடும் சாக்கில்
உன் கை அதன்
மேல் படுகிறதே என்று

தீப ஒளிக்கு
ஈசலை போல்
உயிரை கொடுத்திட தோன்றுதே
உன் புன்னகைக்கு

தெளிந்த வானில்
ஓர் ஒற்றை பறவை - உன்
நெற்றியின் மத்தியில் குங்குமம்

புடவையில் நீ!
பார்த்ததில்லை என்று
சொல்லமாட்டேன் தேவதையை.

கண்கள்,
கல் மனதையும்
காதல் கொள்ள வைக்கும்
காந்த கண்கள்!!

உதடு,
இரு வரியில் பல
பொருள் தரும் திருக்குறள்!!

கன்னம்,
சிரிக்கும் போது
சிறகு விரிக்கும் அன்னம் !!

இடை,
வளைந்து நெளிந்து
செல்லும் சிற்றோடை!!

நடை,
காற்றின் வேகம்
பூவின் மென்மை!!

கூந்தல்,
தலையில் இருந்து
விழும் கருப்பு அருவி!!

சிவன் பார்வதிக்கு தந்தாராம் இடப்பாகம்
தன்னுடலில்
எப்பாகம் தருவாய் நீ எனக்கு
என்னுடலில்,
என் மனதில்

No comments:

Post a Comment