Monday, May 24, 2010

Kavithaiye Theriyuma

வானில் நீயாய் நிலா
தரையில் நிலவாய் நீ

சாதக பறவையானேன் நான்
உன் பார்வை மழைக்காக

கடலில் விழுந்த நிலவின்
ஒளி எதிரொளித்ததாய் ஏமாந்தது
கரையில் நிலவாய் இருக்கும்
உன் முகத்தை கண்டு

உன்னை பார்பதற்கு
சூர்ய சந்திரர்களின் போட்டி
பகலும் இரவும்

ஊன் உறக்கம் இல்லை எனக்கு
ஏன் இரக்கம் இல்லை உனக்கு
வீண் தர்க்கம் எதற்கு இதற்கு
வான் சுவர்க்கம் இருக்கு நமக்கு

இயற்கையில்
பெண்களின் கூந்தலுக்கும் மணமுண்டு
சொன்னவர் முக்கண் முதல்வர்
இப்புவியில்
உனக்கும் எனக்கும் மணமுண்டோ
எவரே சொல்வர்?

அந்த விண்ணுக்கும் இந்த மண்ணுக்கும்
சொந்தமில்லை ஆனால்
எந்தன் உடலுக்கும் உந்தன் உயிருக்கும்
சொந்தமுண்டு

நீ என்ன வனதேவதையா
உன் பார்வையால் என்னில்
காதல் தீயை பற்றவைகிறாய்

வான் நதியில்
முழு மதியை கண்டேண்
என் விழியில்
உன் விழியை கண்டேண்
வேறுபாடு இல்லை
இரண்டுக்கும்

நாம்
வாழ்வோம் நட்சத்திரங்களாய்
வால் நட்சத்திரமாய்
அல்ல

No comments:

Post a Comment